தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்! - மகிந்த ராஜபக்ச

கரோனா வைரஸ் காரணமாக இரு முறை தள்ளிபோன இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று (ஆக.5) வாக்குப்பதிவுடன் தொடங்கி நடக்கிறது.

Sri Lanka's parliamentary election parliamentary election Gotabaya Rajapaksa Sri Lanka coronavirus Rajapaksa brothers Sri Lankans இலங்கை நாடாளுமன்ற தேர்தல் கோத்தபய ராஜபக்ச மகிந்த ராஜபக்ச இலங்கை
Sri Lanka's parliamentary election parliamentary election Gotabaya Rajapaksa Sri Lanka coronavirus Rajapaksa brothers Sri Lankans இலங்கை நாடாளுமன்ற தேர்தல் கோத்தபய ராஜபக்ச மகிந்த ராஜபக்ச இலங்கை

By

Published : Aug 5, 2020, 11:43 AM IST

கொழும்பு:இலங்கையில் புதிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்துவருகிறது.

225 தொகுதிகள் கொண்ட இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முழு அதிகாரத்தையும் கைப்பற்றி ஆட்சியமைக்கும் முனைப்பில் ராஜபக்ச குடும்பம் உள்ளது.

கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தத் தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தினர் நான்கு பேர் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் ஒரு கோடியே ஆறுபது லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்.

இலங்கையில் கரோனா வைரஸிற்கு 11 பேர் உயிர் இழந்துள்ளனர். இரண்டாயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'இந்தியாவில் கரோனா பரிசோதனை குறைவு'- சௌமியா சுவாமிநாதன் தகவல்

ABOUT THE AUTHOR

...view details