மாஸ்கோ:இது தொடர்பாக பேசிய அவர், " இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்னை குறித்து எனக்கு தெரியும். அண்டை நாடுகளுடன் இதுபோன்ற பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அதேநேரம், இந்த பிரச்னையை பிறநாடுகளின் தலையீடு இல்லாமல் தீர்த்துக்கொள்ளும் வல்லமை இந்தியப் பிரதமர் மோடிக்கும், சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கும் உண்டு. அவர்கள் இருவரும் பொறுப்பு வாய்ந்த தலைவர்கள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
மேலும், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு நம்பிக்கையின் அடிப்படையில், மிக வேகமாகவும், வெற்றிகரமாகவும் வளர்ந்துவருகிறது என்று கூறியுள்ளார்.