இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று (மே 19) பேசிய அவர், "உலக நாடுகளில் உள்ள சில அரசியல் தலைவர்கள் உள்நாட்டு அரசியலுக்காகவோ, மக்களை திசைதிருப்பும் நோக்கிலோ கோவிட்-19 பெருந்தொற்று பரவலுக்குச் சீனாவே முழுப் பொறுப்பு எனப் பழி சுமத்தி வருகின்றனர். இந்த முயற்சி எந்நாளும் வெற்றிபெறாது.
இப்பெருந்தொற்று உலக சமூகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இருந்தபோதிலும், சீனா அதன் வெளியுறவுக் கொள்கைகளில் நிலையாக நிற்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒரு இறைச்சி சந்தையில், 2019 டிசம்பர் மாதம், தோன்றியதாகக் கூறப்படும் கோவிட்-19 பெருந்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவிக் கோரத் தாண்டவம் ஆடிவருகிறது.