பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட மோலேவ் சூறாவளியின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டனர். சுமார் 125 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், ஏராளாமான மரங்கள், மின் கம்பங்கள் கீழே விழுந்தன. இவற்றை சீரமைக்கும் பணியில் பிலிப்பைன்ஸ் நாட்டு அரசு அலுவலர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சூறாவளியால் வியட்நாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி, 30க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கில் கொண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.