தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

காற்றில் பரவும் வீரியமிக்க புதிய வைரஸ் கண்டுபிடிப்பு! - India, UK strains

ஹனோய்: வியட்நாமில் அதிக வீரியமிக்க உருமாறிய புதிய கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா, இங்கிலாந்தில் முதலில் காணப்பட்ட உருமாறிய வைரஸ்களின் கலப்பினம் ஆகும். இந்த வைரஸ் காற்றில் வேகமாகப் பரவக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vietnam
வியட்நாமில் புதிய வைரஸ்

By

Published : May 31, 2021, 9:21 AM IST

Updated : May 31, 2021, 10:27 AM IST

கடந்த 2019இல் சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட்-19 வைரஸ், உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17.10 கோடியைக் கடந்துள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35.56 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளன.

அதிக வீரியமிக்க உருமாறிய கரோனா வைரஸ்

இந்த கோவிட் - 19 வைரஸ் உருமாற்றம் அடைந்து, பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. அவை, இந்தியாவில் உருமாற்றம் அடைந்த வைரஸ், பிரேசில் வைரஸ், பிரிட்டன் வைரஸ், தென்னாப்பிரிக்கா வைரஸ் என வகைப்படுத்தப்பட்டன. இந்நிலையில், வியட்நாமில் அதிக வீரியமிக்க உருமாறிய புதிய கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உருமாறிய வைரஸ்களின் கலப்பினம்

இது இந்தியாவிலும், இங்கிலாந்திலும் முதலில் காணப்பட்ட உருமாறிய வைரஸ்களின் கலப்பினம் ஆகும். இந்த வைரஸ் காற்றில் வேகமாகப் பரவக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் முதல் அலையை வியட்நாம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியது. கரோனா பாதிப்பு குறைந்த அளவிலே காணப்பட்டது.

ஆனால், தற்போதைய புதிய அதிக வீரியமிக்க கரோனாவால், பலர் அச்சத்தில் உள்ளனர். இந்த வைரஸ், வியட்நாமில் தற்போது அதிவேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் மத நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல நகரங்களில், பொது மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வியட்நாமில் இதுவரை 1 மில்லியன் மக்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:பிபிஇ கிட்களை துவைத்த தொழிலாளர்கள் - அதிர்ச்சி வீடியோ

Last Updated : May 31, 2021, 10:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details