ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக ஏற்பட்டிருந்த உள்நாட்டுப் போர் கடந்த சில ஆண்டுகளாக தனிந்துவருகிறது. அதன் முக்கிய நகர்வாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா-தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அமைதி ஒப்பந்தத்தில், ஆப்கானில் உள்ள தன்நாட்டு ராணுவத்தினரை அமெரிக்கா திரும்பப் பெறும் எனவும் ஆப்கான் சிறையிலிருக்கும் தலிபான் கைதிகளை விடுவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஒப்பந்தம் குறித்த முக்கிய அறிக்கை ஒன்றை ஆப்கான் அதிபர் தரப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஆப்கானிஸ்தானின் சிறையில் உள்ள 4,600 தலிபான் கைதிகளை அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது. மீதமுள்ள 400 கைதிகள் தீவிராமான குற்றச்சாட்டுகளுடன் உள்ளதால் அவர்களை விடுவிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
விடுதலையான கைதிகள் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்பதை தலிபான், அமெரிக்கா உறுதிபடுத்த வேண்டும். ஆப்கானில் சுதந்திர, ஜனநாயக அரசு ஆட்சி புரிய அந்நாட்டு அரசு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கு அமெரிக்க அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் தலிபானுக்கும் எந்த ரகசிய ஒப்பந்தமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பெய்ரூட் வெடிப்புக்கு பிறகு அமோனியம் நைட்ரேட் குறித்த பார்வைகள்!