தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விண்வெளி வீரர்கள் மூவர் பூமி திரும்பினர் - விண்வெளி வீரர்கள் பூமி திருனர்

மாஸ்கோ : சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க-ரஷ்ய விண்வெளி வீரர்கள் குழு நேற்று கஜகஸ்தான் நாட்டில் பத்திரமாகத் தரையிறங்கியது.

ASTRONAUTS
ASTRONAUTS

By

Published : Apr 18, 2020, 7:18 PM IST

விண்வெளியிலிருந்து பூமி திரும்பிய அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவைச் சேர்ந்த ஜெசிகா மேயர், ஆண்ட்ரூ மார்கன் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரரான ஒலெக் ஸ்கிரிபோச்கா ஆகியோர் திட்டமிட்டபடி நேற்று (ஏப்ரல் 17) கஜகஸ்தானில் தரையிறங்கினர்.

ஜீஸ்காஸ்கன் என்ற மலை பிரதேசத்தில் தரையிறங்கிய இவர்களை ரஷ்ய அலுவலர்கள் மீட்டனர். மூவரின் உடல்நிலை சோதிக்கப்பட்ட பிறகு, ஹெலிகாப்டர் மூலம் பைகோனூர் என்ற பகுதிக்கு சென்றதாக ரஷ்ய அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஜெசிகா மேயர்

இதையடுத்து, அங்கிருந்து மார்கன், மேயர் ஆகியோர் கைஜைலோர்டா என்ற பகுதிக்கு சாலை மார்க்கமாக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து நாசா விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ரஷ்ய வீரர் கிரிபோச்கா மாஸ்கோவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஓலெக் கிரிபோச்கா

கரோனா பெருந்தொற்று காரணமாக சர்வதேச விமானங்கள் கஜகஸ்தான் வான்வெளியில் பறக்க அந்நாட்டு அரசு தடைவிதித்திருப்பதால், அமெரிக்க வீரர்கள் இருவரும் சாலை மார்க்கமாக அழைத்துச் சென்றதாக ரஷ்ய மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.

ஆண்ட்ரூ மார்கன்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மூவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : இந்தியாவில் மீண்டும் விமான சேவை; ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details