அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான தலிபான் இயக்கத்திற்கும் 15 ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவிவந்த நிலையில், அங்கு தலிபான் அமைப்பை கட்டுக்குள் கொண்டுவந்ததாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தலிபானுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி கையெழுத்தானது.
இந்தச் சூழலில், அமைதி ஒப்பந்ததிற்கு குந்தகம் விளையும் விதமாக இரு தரப்பும் தற்போது மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளன. கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தலிபான் அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது.