தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கன் அமைதி ஒப்பந்தத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போர்

காபூல் : ஆப்கன் அமைதி ஒப்பந்தத்தை மீட்டெடுக்கும் நோக்கில், அந்நாட்டுத் தலைவர்களுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸால்மே கலில் ஸாத் தெரிவித்துள்ளார்.

afghanistan peace deal
afghanistan peace deal

By

Published : May 22, 2020, 12:03 AM IST

ஆப்கானிஸ்தானில் 2019ஆம் ஆண்டு முதல் அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவி வருகிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றபின், ஆப்கனில் உள்ள அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் முடிவை எடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக, அங்குள்ள தலிபான் பயங்கரவாத அமைப்புடன் சுமார் ஓராண்டு காலம் அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொண்ட அமெரிக்கா, கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

கலவையான விமர்சனங்களுக்குள்ளான இந்த ஒப்பந்தம், அந்நாட்டில் அமைதியை மலரச்செய்யும் என்னும் நம்பிக்கையை உருவாக்கியது.

ஆனால், தற்போது ஆப்கனில் தலிபான்களின் கை ஓங்கி வருவதால், ஆப்கன் அமைதி ஒப்பந்தம் தோல்வியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, அந்நாட்டில் (2019ல்) நடைபெற்ற அதிபர் தேர்தலில் 50 விழுக்காடு வாக்குகளுக்கு மேலாகப் பெற்று அஷ்ரஃப் கனி மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றார். எதிர்க்கட்சித் தலைவர் அப்துல்லா 39 விழுக்காடு வாக்குகள் பெற்றார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமைதியைக் கொண்டுவரும் முயற்சியாக இரு தலைவர்களும் இணைந்து செயல்படும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர். இதன் முக்கிய நகர்வாக அதிபர் அஷ்ரஃப் கனி, தனது அரசியல் எதிர்த் தரப்பான அப்துல்லாவுடன் அரசின் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில், ஆப்கன் அமைதி ஒப்பந்தத்தை மீட்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக, அந்நாட்டு சிறப்புத் தூதர் ஸால்மே கலில்ஸாத் தெரிவித்துள்ளார்.

அஷ்ரஃப் கனி, அப்துல்லாவுடன் தான் மேற்கொண்ட சந்திப்பு குறித்து இன்று ட்வீட் செய்திருந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், அந்நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுப்பது, கைதிகள் பரிமாற்றம், தலிபான்-ஆப்கானிஸ்தான் அரசு இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் தாங்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டதாக கலில்ஸாத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மாறிவரும் இந்தியாவின் ஆப்கானிய கொள்கை!

ABOUT THE AUTHOR

...view details