தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

"வெளியேறக் கூடாது"- பாகிஸ்தான் அமெரிக்கத் தூதரக அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் - அமெரிக்கா ஈரான் பதற்றம்

இஸ்லாமாபாத் : ஈரான்-அமெரிக்கா இடையேயான பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலர்கள் தூதரகத்தைவிட்டு வெளியே செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

us embassy, அமெரிக்கத் தூதரகம்
us embassy

By

Published : Jan 4, 2020, 1:09 PM IST

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மிக முக்கிய தளபதிகளுள் ஒருவரான குவாசிம் சுலைமானி உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதல் உச்சத்திற்கு சென்றுள்ளது. ஈராக், ஈரான் தவிர, சவுதி அரேபியா, இஸ்ரேல், சிரியா என ஒட்டுமொத்த மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நிலவுகிறது.

இந்தச சூழலில், பாகிஸ்தான் அமெரிக்கத் தூதகரக்கில் பணியாற்றும் அலுவலர்கள் தூதகரத்தைவிட்டு வெளியேறக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

"ஈராக்கில் நடந்த சம்பவங்களுக்கு எதிர்வினைகள் எழ வாயப்புள்ளதால் இச்சூழலை கருத்தில்கொண்டு, தூதரகத்தில் பணியாற்றும் அரசு அலுலர்கள் யாரும் தூதரகத்தைவிட்டு வெளியேறக்கூடாது" என பாகிஸ்தான் அமெரிக்கத் தூகரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : போருக்கு அறைகூவல்: 2020ஐ அதிர்வுடன் ஆரம்பித்துவைத்த அமெரிக்கா

ABOUT THE AUTHOR

...view details