தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தாலிபன் தாக்குதல்: விமான நிலையத்துக்கு மாறிய அமெரிக்க தூதரகம்

தொடர் தாலிபன் தாக்குதல் காரணமாக காபூல் அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக நகர விமான நிலைய வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

US Embassy
US Embassy

By

Published : Aug 16, 2021, 7:32 AM IST

காபூல்:ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்குமிடையே கடும் மோதல் நிலவி வருகிறது. அந்நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால், தாலிபன்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், தாகர், ஜவ்ஜான், நிம்ரோஸ், குந்தூஸ், மஷார்-ஐ-ஷெரீப் என 17 மாகாணங்களை தாலிபன்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூலையும் அவர்கள் கைப்பற்றிவிட்டனர். இந்தத் தாக்குதலில், பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்.

இதனிடையே, ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார். முன்னதாக, நேற்று தலைநகர் காபூல் நகருக்குள் நுழைந்த தாலிபான்கள், அங்குள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஹெலிகாப்டரை இறக்கினர்.

இதன் காரணமாக, அமெரிக்க உள்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கென், காபூல் அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக நகர விமான நிலைய வளாகத்துக்கு மாற்றப்படுவதாக தெரிவித்தார். அதன்படி, தூதரகம் மாற்றப்பட்டது.

இந்த நிலையில், காபூல் தூதரகம், தனது வலைப்பக்கத்தில், ”காபூலில் விமான நிலையம் உள்பட அனைத்துப் பகுதிகளின் பாதுகாப்பு நிலைமை மாறிவிட்டது. விமான நிலையத்தில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

எனவே நாங்கள் அமெரிக்க குடிமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்துகிறோம். அமெரிக்க குடிமக்கள், நாட்டை விட்டு வெளியேறுவதற்கான விருபத்தை தெரிவிக்கலாம். காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை அழைக்க வேண்டாம்" என பதிவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி!

ABOUT THE AUTHOR

...view details