உலகமே கரோனா பிடியில் சிக்கித் தவித்து வரும் சூழ்நிலையில், சத்தமே இல்லாமல் சுகாதார சீர்குலைவு உலகை அழிவின் பாதைக்கு அடுத்த 10 ஆண்டுக்குள் கொண்டு செல்லும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய சுகாதார பாதுகாப்பில் முன்னேற்றம் இருந்தபோதிலும், உலக மக்கள் தொகையுடன் கணக்கிட்டால் 4.2 பில்லியன் மக்கள், மனித கழிவுகளை பொது இடத்திலும், சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை கண்டுகொள்ளாமலும் பயணித்துவருகின்றனர்.
கணக்கிட்டதில், 673 மில்லியன் மக்கள் கழிப்பறைகள் வசதி இல்லாமல் பொது இடத்தில் மலம் கழித்துவருகின்றனர். அதேபோல், 698 மில்லியன் குழந்தைகளுக்கு அவர்களின் பள்ளியில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை. மோசமான சுகாதாரத்தின் விளைவுகள் பொது சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பேரழிவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இந்த திடீர் அறிக்கையானது உலகில் சுகாதார தொடர்பான் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், எஞ்சியிருக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகளை மக்கள் அடையாளம் காண்பதற்காக மட்டும்தான். இந்த சவால்களை அவசரமாக எதிர்கொள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கும் கூட்டாளர்களுக்கும் எஸ்டிஜி 6 அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.
2030ஆம் ஆண்டுக்கு இன்னும் 10 ஆண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், எஸ்.டி.ஜி துப்புரவு இலக்குகளை உலகம் அடைய வேண்டுமானால், சுகாதார பாதுகாப்பு அதிகரிக்கும் விகிதம் நான்கு மடங்காக தேவைப்படும்.
சவால் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், விரைவான முன்னேற்றம் சாத்தியம் என்பதை வரலாறு காட்டுகிறது. முன்னேற்றத்தை துரிதப்படுத்த, சுகாதாரம் என்பது ஒரு அத்தியாவசிய பொது நன்மை என்று வரையறுக்கப்பட வேண்டும். இது ஆரோக்கியமான மக்கள் மற்றும் வளமான சமுதாயத்திற்கு அடித்தளமாக உள்ளது. பல நாடுகள் ஒரு தலைமுறைக்குள் துப்புரவுப் பாதுகாப்பில் விரைவான முன்னேற்றத்தை அடைந்து, வாழ்க்கை, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தை மாற்றியமைத்து சாதித்துள்ளது.