தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அடித்தட்டு ஆப்கான் குடும்பங்களுக்கு ஐநா உதவிக்கரம் - ஆப்கானிஸ்தானில் யுனிசெப் அமைப்பு

ஆப்கானிஸ்தானின் 800க்கும் மேற்பட்ட அடித்தட்டு குடும்பங்களுக்கு ஐநா சபை அடிப்படை உதவிகளை வழங்கியுள்ளது.

UNICEF
UNICEF

By

Published : Jan 19, 2022, 2:14 PM IST

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான யுனிசெப் அமைப்பு ஆப்கானிஸ்தானில் உள்ள 800 குடும்பங்களுக்கு உணவு, மருத்துவ தேவைகள், உடை போன்ற அடிப்பைடை தேவைகள் வழங்கியுள்ளது.

ஆப்கன் நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வாயிலாக இந்த உதவிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பொருளாதார ரீதியாக அடித்தட்டு பகுதியில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் இந்த உதவிகளை கொண்டு சேர்க்க ஐநா திட்டமிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட எதிர்பாராத அரசியல் மாற்றம் காரணமாக அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. இதில் குழந்தைகள் தான் பாதிக்குள்ளாகியுள்ளனர் எனவும் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுவதாகவும் ஐநா கவலை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஹாங்காங்கில் வெள்ளெலிகளுக்கு கரோனா தொற்று

ABOUT THE AUTHOR

...view details