ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கமான சர்வதேச அணுசக்தி கழகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய கிழக்கு நாடான ஈரானின் அணு உலை தொடர்பான நடவடிக்கைகள் சந்தேகத்தை கிளப்புவதாகத் தெரிகிறது. அணுசக்தி கழக்திற்கு கிடைத்துள்ள நம்பகத்தகுந்த விவரங்களின்படி ஈரான் நாட்டில் மூன்று ரகசிய இடங்களில் அணு உலைகள் அமைக்கப்பட்டு, சோதனைகள் நடைபெறுகின்றன.
இச்சோதனைகள் சர்வதேச விதிமுறைகளை பின்பற்றாமல் யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கையில் ஈரான் அரசு செயல்படுகிறது என்ற ஐயம் எழுந்துள்ளது. இதுகுறித்து ஐ.நா விசாரணை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.