அர்மேனியா-அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியிலிருந்து போர் நடைபெற்று வருகிறது. சர்ச்சைக்குரிய பிராந்தியமான நகோர்னோ-காராபக் பகுதியில் இரு நாடுகளும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன. இந்த மோதலை சீர்செய்ய அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை தற்போது தலையிட்டுள்ளது. ஐநா சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெசின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃப்பேன் துராஜிக் இது குறித்து பேசுகையில், "நகோர்னா-காராபக் பகுதியில் இரு நாடுகளும் மேற்கொண்ட மோதல் காரணமாக சுமார் 1.30 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேறியுள்ளனர். 76 பள்ளிகள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான குழந்தைகள் வான்வழித் தாக்குதல் காரணமாக போர் பயத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.