கடலுக்கடியில் இருக்கும் ரகசிய உலகத்தை காணவும், அறிய வகைச் சார்ந்த மீன்களை கண்டு ரசிக்கவும் பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துவருகிறது. ஆனால், சிலருக்கு அதுதான் பொழுதுபோக்காக இருக்கிறது. அந்த வகையில் வாடகை போக்குவரத்துத் துறையில் சிறந்து விளங்கும் உபேர் நிறுவனம் தற்போது ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. உபேர் நிறுவனம் முதன் முறையாக கடலுக்கடியில் சுற்றுலா செல்லும் வாகனத்தை அறிமுகம் செய்து பரிசோதனை முறையில் வெற்றி கண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பகுதியில் கிரேட் பேரியர் ரீஃப் (great barrier reef) என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை பகுதியை கடலுக்குள் சென்று காணக்கூடிய வாகனம் ஒன்றை உபேர் நிறுவனம் தயார் செய்துள்ளது. எஸ்.சி. உபேர் என்று பெயர் சூட்டியுள்ள நீர்மூழ்கி வாகனத்தில் இருவர் மட்டும் பயணிக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்.சி. உபேர் கடலுக்குள் 20மீட்டர் தூரம் வரை செல்லும்.