மணிலா:பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய ராய் புயல் காரணமாக, அந்நாட்டின் தெற்கு பகுதிகள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக, இதுவரை 208 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். 3 லட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் நாசமாகியுள்ளன.
பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட ராய் புயல்; 208 பேர் பலி... 50 பேர் மாயம்... - பிலிப்பைன்ஸ் புயல்
பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய ராய் புயல் காரணமாக 208 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் மாயாகியுள்ளனர்.
அதிகபட்சமாக விசயாஸ் பகுதியில் 129 பேர் உயிரிழந்துள்ளனர். 3,000க்கும் மேற்பட்ட பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், ராய் புயல் டிசம்பர் 16ஆம் தாக்கியது. புயல் ஓய்ந்தும் கனமழை பெய்துவருவதால், மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது. மேலும் பிலிப்பைன்ஸில் 2013ஆம் ஆண்டு வீசிய புயலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:ஒமைக்ரான் அச்சுறுத்தல்: மீண்டும் லாக்டவுண்!