தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வியட்நாமை புரட்டி எடுக்கும் சூறாவளி! - வியட்நாமை புரட்டி எடுக்கும் சூறாவளி

ஹனோய் : வியட்நாமில் சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

Vietnam
Vietnam

By

Published : Oct 31, 2020, 11:36 PM IST

வியட்நாம் நாட்டை ’மோலே’ என்ற சூறாவளி தாக்கியதில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், இதில் சிக்கி 27 பேர் உயிரிழந்ததாகவும், 67 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தேசியப் பேரிடர் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த இயற்கைப் பேரிடரால் 63 பாலங்கள் சேதமடைந்துள்ளதாகவும், தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளூர் சாலைகள் ஆகியவை பாதிப்படைந்துள்ளதாகவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

மீட்புப் பணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சூறாவளி தாக்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details