ஜப்பானின் லுபிட் என்ற சூறாவளி தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் தென்மேற்குப் பகுதியில் உள்ள க்யூஷு பிராந்தியத்தை மையம் கொண்டு இந்த சூறாவளி தாக்கியது.
இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. சில பகுதிகளில் சுமார் 125 கிமீ வேகத்தில் காற்று வீசி, 300 மில்லி மீட்டர் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.