தென் பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வடக்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிஜி ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 7.9 மற்றும் 7.5 என பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், தற்போது 7.7 ரிக்டர் அளவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக வடக்கு நியூஸிலாந்து, வணூட்டு, புதிய கலிடோனியா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக நியூசிலாந்து தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ’லாயல்டி தீவின் தென்கிழக்கு பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.