தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அதிபர் தேர்தல் முடிந்தவுடன் வெற்றி அறிவிப்பா...ட்ரம்ப் மறுப்பு! - அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: அதிபர் தேர்தல் முடிந்தவுடன் வெற்றியை அறிவிக்க திட்டமிட்டுள்ளேன் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

tru
tru

By

Published : Nov 2, 2020, 2:12 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை(நவம்பர் 3) நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதிபர் தேர்தல் முடிந்தவுடன் தனது வெற்றியை ட்ரம்ப் அறிவிக்கவுள்ளதாக பரவிய செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "தேர்தல் இரவில் முன்கூட்டியே வெற்றியை அறிவிக்க திட்டமிட்டுள்ளேன் என்பது தவறான செய்தி. அதே நேரத்தில், தேர்தல் இரவில் தனது அணி ஒரு சட்டப்போருக்கு தயாராகி வருகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பான தேர்தலுக்குப் பிறகு வாக்குச் சீட்டுகளை சேகரிப்பது ஒரு பயங்கரமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். தேர்தல் முடிந்தபின் நீண்ட காலத்திற்கு வாக்குப்பதிவு செய்ய மக்கள் அல்லது மாநிலங்கள் அனுமதிக்கப்படுவது மோசடி மற்றும் தவறான பயன்பாட்டிற்கு வழிவகுக்கும்.

நவீன கால கணினி உலகில் தேர்தலின் இரவில் முடிவுகளை நம்மால் அறிய முடியாதபோது பயங்கரமான விஷயம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details