தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்ட சம்பவம் - நாடு கடந்த தமிழீழ அரசு கண்டனம் - Sinhala racist

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண்

By

Published : Jan 13, 2021, 1:14 PM IST

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் ஜனவரி 8ஆம் தேதி இரவு இடிக்கப்பட்டது. அப்பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு திமுக, அதிமுக, விசிக, மதிமுக ஆகிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தினைத் தொடர்ந்து, அதே இடத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் அமைப்பதற்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவகொழுந்து ஸ்ரீசத்குணராஜா அனுமதி வழங்கினார்.

இந்நிலையில், நினைவுத்தூண் இடிக்கப்பட்டதற்கு நாடு கடந்த தமிழீழ அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த கண்டனக்குறிப்பில், "இனப்படுகொலை நடைபெற்றதற்கான தடயத்தை அழித்து, சிங்கள இனவெறி மற்றும் அதன் அருவருப்பான முகத்தை மறைக்கத்துடிக்கும் முயற்சியாகவே நினைவுத்தூண் இடிக்கப்பட்டதைப் பார்க்க முடிகிறது. அரசியல் உரிமைக்காக போராடியவர்களையும், அதற்காக உயிர் நீத்த பொதுமக்களையும் யாரும் நினைவில்கொள்ளக்கூடாது என்பதற்காகவே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூண் இடிக்கப்பட்டுள்ளது.

சிங்களர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த இனப்படுகொலை, தமிழ் மக்களின் மனதில் எப்போதும் ஆறாத வடுவாகவும், சிங்கள இனவெறியை எரித்து சாம்பலாக்கத் துடிக்கும் நெருப்பாக இருக்கும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மீண்டும் உதிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண்: ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்ட மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details