பாகிஸ்தான் நாட்டின் கராச்சிக்கு அருகே உள்ள கோட்கி என்ற பகுதியில் இன்று கோர ரயில்விபத்து ஏற்பட்டது. சர் சயித் விரைவு ரயிலும் மில்லத் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 120க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானில் ரயிகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 40 பேர் பலி - இம்ரான் கான் ட்வீட்
பாகிஸ்தானில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
Pakistan
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்திற்கான உரிய காரணத்தை விரைந்து கண்டறிய அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:இறந்தவர்கள் கனவுல வராங்க: கனடாவில் மூளையைத் தாக்கும் புதிய நோய்!