தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - ஆயிரத்தை தொட்டது - Covid - 19 pakistan

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

By

Published : Mar 25, 2020, 12:56 PM IST

உலக நாடுகள் அனைத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஆசிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு தற்போது தீவிரமாகக் பரவிவருகிறது. இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக 21 நாட்கள் முழு அடைப்பு அமலில் உள்ளது. இந்தியாவைப்போலவே பாகிஸ்தானிலும் லாக் டவுன் அறிவிக்க வேண்டும் என அங்குள்ள மருத்துவர்கள் வலியுறுத்திய நிலையில் முதலில் லாக் டவுனுக்கு சாத்தியமில்லை என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார். அங்கு 25 விழுக்காடு மக்கள் தினக்கூலிகள் என்பதால் அரசு நடவடிக்கை எடுப்பது கடும் சிக்கலை ஏற்படுத்தும் என்றார்.

பின் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, ராணுவ உதவியுடன் வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நகரங்கள் அடைக்கப்பட்டு கட்டுபடுத்தப்பட்டுவருகின்றன. மேலும் வைரஸ் பாதிப்பில் உள்ள பாகிஸ்தானுக்கு அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இந்நிலையில், தற்போது பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக அங்குள்ள சிந்து மாகாணத்தில் 400க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், அங்கு இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:'பாகிஸ்தான்ல கோவிட்-19 வைரஸ் சீரியஸ்னஸ் தெரியாம விளையாடுறாங்க' - அக்தர் வருத்தம்

ABOUT THE AUTHOR

...view details