சீனாவில் வசித்து வருபவர் ஜாங் பின்ஷெங் (Zhang Binsheng)(30). இவருக்குச் சமீப காலங்களாக மூச்சு விட முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும், மூக்குப் பகுதியில் அழுகிப் போன துர்நாற்றம் வருவதைக் கவனித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மருத்துவரை அணுகிய ஜாங்க்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மூக்குப் பகுதியை எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது, அங்குப் பல் வளர்ந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ஜாங் 10 வயது இருந்த போது மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது, அவர் வாய் பகுதியிலிருந்து இரண்டு பற்கள் காணாமல் சென்றுள்ளது. ஒரு பல் கீழே கிடப்பதைப் பார்த்த ஜாங், இன்னொரு பல் எங்காவது இருக்கும் என விட்டு விட்டார். ஆனால், இரண்டாவது பல் எப்படியோ, அவரது நாசியில் வேரூன்றி வளர்ந்துள்ளது. இதை இருபது வருடங்களாக ஜாங் கண்டுபிடிக்காமல் இருந்துள்ளார் எனத் தெரிவித்தார்.