தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

3,000 எட்டிய பலி எண்ணிக்கை, சீனாவில் தொடரும் கொரோனா சோகம் - சீனா கொரோனா பாதிப்பு

பெய்ஜிங்: கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் நோய்ப் பாதிப்புக் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

சீனா
சீனா

By

Published : Mar 6, 2020, 4:13 PM IST

கடந்த மூன்று மாதங்களாக உலகையே அச்சுறுத்திவரும் வைரஸ் கொரோனா, அதன்பிறப்பிடமான சீனாவை இன்று வரை வாட்டி வருகிறது. சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் பகுதியில் முதலில் பரவத் தொடங்கிய கொரோனா, இதுவரை அந்நாட்டில் மட்டும் ஆயிரக்கணக்கானோரை காவு வாங்கியுள்ளது.

ஹூபே மாகாணத்தை தனிமைப்படுத்தி அங்குள்ள மக்களுக்கு பிரத்யேக மருத்துவ வசதிகளை ஏற்படுத்தியுள்ள சீன அரசு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் பலவற்றை உருவாக்கியது.

இந்நிலையில், சீன சுகாதாரத்துறை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் 143 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்குள்ளானது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 552ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை அந்நோய்க்கு 3 ஆயிரத்து 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கொரோனாவால் முடிமூடியுடன் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வந்த உறுப்பினர்!

ABOUT THE AUTHOR

...view details