டோக்கியோ: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தும் அடுத்த ஆண்டில் நடைபெறும் என ஒலிம்பிக் ஆணையமும், ஜப்பான் அரசாங்கமும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, 2021 ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்ட பன்னாட்டு ஒலிம்பிக் ஆணைய தலைவர் பேசுகையில், அடுத்த ஆண்டில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். குறைவான பார்வையாளர்களுடன் போட்டிகளை பாதுகாப்பான முறையில் நடத்த முடியும் என தற்போது நடைபெறும் விளையாட்டு போட்டிகள் காட்டுகின்றன. இவை எங்களுக்கு புதிய நம்பிக்கைகளைத் தருகிறது.