தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: ராஜினாமா செய்கிறாரா யோஷிரோ மோரி?

டோக்கியோ: சர்ச்சை கருத்தில் சிக்கிக்கொண்ட டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் யோஷிரோ மோரி ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Yoshiro Mori
யோஷிரோ மோரி

By

Published : Feb 11, 2021, 2:54 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் யோஷிரோ மோரி ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்.3, ஜப்பானிய ஒலிம்பிக் கமிட்டி குழு உறுப்பினர்களிடையே ஆன்லைனில் மீட்டிங் நடைபெற்றது. அப்போது பேசிய டோக்கியோ ஒலிம்பிக் குழு தலைவர் யோஷிரோ மோரி, "கமிட்டி குழுவில் பெண்கள் அதிகளவில் இடம்பெற்றால், அவர்கள் நீண்ட நேரம் பேசும்போது மோதல்போக்கு அதிகரிக்ககூடும்" என தெரிவித்தார்.

இந்தச் சர்ச்சை கருத்தைப் பதிவிடும்போது, குழுவில் 5 பெண்கள் உட்பட 25 பேர் இடம்பெற்றிருந்தனர். இதனையடுத்து அவரை பதவி விலகக் கோரி பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இதுகுறித்து, ஜப்பானிய ஒலிம்பிக் குழு தலைவர் யோஷிரோ மோரி பேசுகையில், "இது ஒரு கவனக்குறைவான கருத்து. நான் மன்னிப்பு தெரிவிக்க விரும்புகிறேன். பெண்களுக்குப் பாகுபாடு காட்டும் எண்ணம் எனக்கு இல்லை" எனத் தெரிவித்துள்ளார். மேலும், அவர், தனது தவறை உணர்ந்து, ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடியே நிச்சயம் நடைபெறும் என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details