பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான அல்-அஜிசியா உருக்காலை ஊழல் வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், 2018ஆம் ஆண்டு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து, அவர் காட் லக்பத் சிறையில் தண்டனை பெற்று வருகிறார். உடல்நிலை மோசமானதைச் சுட்டிக்காட்டி அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் பிணை பெறுவதற்கு அவரது தரப்பு தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் மகளும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்)கட்சியின் துணைத் தலைவருவான மரியம், மறைமுக சக்திகளிடமிருந்து பெரியளவில் நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதன் காரணமாகவேதனது தந்தைக்குதண்டனை வழங்கப்பட்டது என்று கூறினார். இது தொடர்பாக, தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் கூற்று உள்ள வீடியோ ஒன்றையும் மரியம் வெளியிட்டார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.