கரோனா வைரஸ் உலகை சூறையாடி வரும் வேளையில், அதனை அதிவிரைவாகக் கண்டறியும் கருவிகளை உருவாக்கும் பணியில் பல நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பறவைக் காய்ச்சலுக்கு எதிராக உடலில் உருவாகும் ஆன்டிபாடிகளை 20 நிமிடங்களில் கண்டறியும் பரிசோதனைக் கருவி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குறிப்பிட ஒரு வேதிப்பொருளை உருவாக்கினால், இந்தக் கருவியைக் கொண்டு கரோனா வைரஸ் பரிசோதனையை அதிவிரைவாக மேற்கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸை பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் பிசிஆர் முறையில் முடிவுகள் வெளியாகக் காலதாமதமாகிறது. மேலும், ரேபிட் கிட் கருவிகள் பயன்படுத்துவதால் முரண்பாடான முடிவுகள் வெளிவருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : தடுப்பூசி திட்டங்களில் காலதாமதம்... ஆபத்தில் 80 மில்லியன் குழந்தைகள் - எச்சரிக்கும் WHO