தாய்லாந்து அரசராக இருந்த பூமிபோன் அடூன்யடேட், கடந்த 2016ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக தனது 88ஆவது வயதில் உயிரிழந்தார். உலக வரலாற்றில் நீண்ட காலம் அரசராக பதவி வகித்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. அவரது மறைவுக்கு பிறகு அரசராக அவரது மகன் மஹா வஜிரலோங்கோன் பொறுப்பெற்று கொண்டார். எனினும், பல்வேறு காரணங்களால் அவரது முடிசூட்டு விழா தள்ளிபோனது.
இந்நிலையில் மே 4ஆம் தேதி அவரது முடிசூட்டு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, தனது பாதுகாவலர்கள் குழுவில் அதிகாரியான சுதிதா என்ற பெண்னனை அரசர் மஹா வஜிரலோஹ்கோன் இன்று திருமணம் செய்துகொண்டார்.