கராச்சி : பாகிஸ்தானில் மத சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக இந்து இளம்பெண்கள் மத அடிப்படைவாதிகளால் கடத்தப்பட்டு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர் என்ற குற்றஞ்சாட்டு வலுத்துவருகிறது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 18 வயதான இளம் பெண் பூஜாவை சிலர் கடத்த முயற்சித்தனர். இந்தக் கடத்தல் முயற்சி தோல்வியுற்ற நிலையில் அந்தப் பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.
பாகிஸ்தானில் 1300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு ஆலயம் கண்டுபிடிப்பு!
இந்தச் சம்பவம் சுக்கூர் பகுதியில் ரோகி என்ற இடத்தில் நடந்துள்ளது. கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து பூஜா தப்பித்து ஓடிய நிலையில் நடுத்தெருவில் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் சிந்து மாகாணத்தில் ஒவ்வொரு ஆண்டும் மத சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன என்ற குற்றச்சாட்டு அதிகரித்துவருகிறது. மேலும் இளம்பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர் என்றும் 2013-19ஆம் ஆண்டுக்குள் 156 கட்டாய மதமாற்ற சம்பங்கள் நடந்துள்ளன என்றும் மத சிறுபான்மை உரிமைகள் மற்றும் சமூக நீதி அமைப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மணப்பெண்ணைக் கடத்தி கட்டாய மதமாற்றம்: பாகிஸ்தானில் அரங்கேறிய மற்றுமொரு கொடூரம்!
பாகிஸ்தானில் 1.60 சதவீதம் இந்துக்கள் உள்ளனர். அதில் சிந்து மாகாணத்தில் மட்டும் 6.51 விழுக்காடு இந்துக்கள் உள்ளனர். இங்கு, அதிகளவிலான மத சிறுபான்மையினர் பட்டியலில் இந்துக்கள் முதலிடத்தில் உள்ளனர்.
அந்நாட்டின் தரவுகள் இங்கு, 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர் என்று கூறுகின்றன. இருப்பினும் 90 லட்சம் இந்துக்கள் வசிப்பதாக அச்சமூக மக்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : கட்டாய மதமாற்றத்துக்கு ஆளான பாகிஸ்தான் இந்து மாணவி!