தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்குப் பின்னடைவு!

காபூல்: ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 175 தாலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக அரசுத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

By

Published : Nov 2, 2020, 9:43 PM IST

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அந்நாட்டு அரசுக்கும் தாலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

ஆனால், பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்கின்றன. குறிப்பாக பாதுகாப்புப் படை வீரர்களையும், காவல் துறையினரையும் குறிவைத்து தாலிபான் அமைப்பு தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திவருகிறது.

தாலிபான்களுக்கு எதிராக அரசுப் படைகளும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுவருகின்றன. கந்தகார் மாகாணத்தில் அரசுப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் மொத்தம் 175 தாலிபான்கள் உயிரிழந்ததாக ஆப்கான் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலின்போது 26 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது ‌

தெற்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு தாலிபான் கமாண்டர்கள் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்புவரை சிறிய அளவிலான இழப்பையே தாலிபான் சந்தித்ததாகவும் ஆனால் இந்தத் தாக்குதல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details