காபூல்:ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்குமிடையே கடும் மோதல் நிலவி வருகிறது. அந்நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால், தலிபான்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக, தாகர், ஜவ்ஜான், நிம்ரோஸ் மாகண தலைநகங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தற்போது குந்தூஸ் மாகணத்தையும் கைப்பற்றி விட்டனர். 2015-2016ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, குந்தூஸ் மாகாணம் மீண்டும் தலிபான்களால் கைப்பற்றப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகம், "கடந்த 5ஆம் தேதி தொடங்கிய இந்த தலிபான் தாக்குதலில், நிம்ரோஸ் மாகாணத்தின் ஜரஞ்ச் நகரம் முதலில் கைப்பற்றப்பட்டது. அதையடுத்து தாகர், ஜவ்ஜான், குந்தூஸ் மாகாணத் தலைநரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நாட்டின் தலைநகர் காபூலில் கூட தலிபான்கள் ஆதிக்கம் உள்ளது.
பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். இந்த மோதலில், தலிபான் படைகள் பொதுமக்களின் வீடுகளில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்துகின்றனர். ஆயிரக்கணக்கான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதற்கெல்லாம் கட்டாயம் பதிலடி கொடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:ஆப்கான் பயங்கரவாத மோதல்: ஒரே நாளில் 11 பேர் கொலை