ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் உள்ள தாஹ் யாக் நகரில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதாகசெய்தி வெளியான நிலையில், அவ்விமானம் அமெரிக்கப் படையைச் சேர்ந்தது என தலிபான் செய்தித்தொடர்பாளர் தற்போது தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க ராணுவத்திடம் கேட்டபொழுது அவர்கள் பதிலளிக்கவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் பரவிவரும் காணொலி ஒன்றில் அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த பொம்பார்டியர் இ-11 ஏ விமானம் துண்டுதுண்டாகச் சிதறிக்கிடப்பதைக் காணமுடிகிறது.