ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப்பின் தாலிபான் அரசு ஆட்சியமைத்துள்ளது. புதிதாக அமைந்துள்ள இஸ்லாமிக் அமீரக அரசின் அமைச்சரவையில் பிரதமராக முல்லா முகமது ஹசன் பதவிவகிக்கிறார்.
முல்லா அப்துல் கனி பரதார், மொலாவி அப்துல் சலாம் ஹனாபி ஆகியோர் துணைப் பிரதமராகப் பதவியில் உள்ளனர்.
துணை பிரதமரான அப்துல் கனி பரதார் சண்டையின்போது படுகாயம் அடைந்ததாகவும், அதன் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் காட்டுத் தீயாய் பரவின.
இந்நிலையில், இந்த தகவலுக்கு தாலிபான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. அவர் முழு உடல்நலத்துடன் உயிருடன்தான் உள்ளார் என தாலிபான் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார். மேலும், பரதார் உயிருடன் இருப்பதற்கு ஆதாரமாக அவரின் ஆடியோ பதிவையும் தாலிபான் வெளியிட்டுள்ளது.
தாலிபான் அரசின் முக்கிய முகமாகக் கருதப்படுபவர் பரதார். அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்தின் காரியகர்தாவாக திகழ்ந்தவர் அப்துல் கனி பரதார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆப்கனை விட்டு வெளியேறிய குத்துச்சண்டை வீராங்கனை