காபுல்: இஸ்லாமிக் எமிரேட்டின் துணை பிரதமர் முல்லா அப்துல் கானி பராடர் சமீபத்தில் காணாமல் ஆக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தலிபான் தலைமைகளுக்குள் முரண்பாடு நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் ஆப்கானில் ஆட்சியைப் பிடித்த தலிபான்கள் மத்தியில் பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் போக்கு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. முல்லா அப்துல் கானி பராடர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சிலர் கருதுகின்றனர்.
தலிபான்களை நீண்ட காலமாக பின் தொடரும் பத்திரிகையாளர் இதுகுறித்து, தலிபான்கள் 20 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு ஆப்கானிஸ்தானை பிடித்தார்கள். தலிபான்கள் கடந்த ஆட்சியின் அலுவலர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டனர்.
தற்போது கார்களை, வீடுகளை பிடுங்குவதே அவர்கள் குறிக்கோளாகிவிட்டது. தலிபான்கள் ஆட்சி மோசமான நிலையை அடைந்துள்ளது என தெரிவித்தார். இதனிடையே பொதுமக்கள் தவறு செய்தால் கை, கால்களை வெட்டும் தண்டனை வழங்கப்படும் - தாலிபான்கள் அமைப்பின் தலைவர் முல்லா நூடுதீன் துராபி தெரிவித்து இருப்பது பொதுமக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க:அமெரிக்கா சென்ற நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு