தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'இம்ரான் கான், தலிபான் பிரதிநிதிகளைச் சந்திக்கவில்லை' - உதவியாளர் ட்வீட்! - Taliban delegation

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கான் தலிபான் பிரதிநிதிகளைச் சந்திக்கவில்லை என்றும், அவர் தலிபான் பிரதிநிதிகளைச் சந்தித்ததாக ஊடகங்களில் வெளியான தகவல் எதுவும் உண்மை இல்லை என்றும் இம்ரான் கானின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

imran khan

By

Published : Oct 5, 2019, 9:22 AM IST

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், தலிபான் அரசியல் ஆணையத்தின் தலைவர் முல்லா அப்துல் கானி பரதரும் சந்தித்து ஆப்கான் அமைதி குறித்து ஆலோசனை செய்யப்போவதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அனால் ஃபிர்தஸ் ஆஷிக் அவான் எனப்படும் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் ஊடகங்கள் கூறுவது போல் ஒரு சந்திப்பு நிகழவே இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

'தாலிபான் பிரதிநிதிகள் பிரதமரை அழைக்கவில்லை. இதைப்பற்றி வெளிவந்த செய்திகள் எதுவும் உண்மை இல்லை' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபிர்தஸ் ஆஷிக் அவான் ட்வீட் செய்திருந்தார்.

இதையும் படிங்க: ‘சகோதரனைக் கொன்ற பெண் காவலருக்கு மன்னிப்பு’ - நீதிமன்றத்தில் உருக்கமான சம்பவம்

ABOUT THE AUTHOR

...view details