தைவான் தீவு நாட்டில் ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டு அதிபர் சாய் இங் வென் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கட்சி (Democratic Progressive Party) 57.2 சதவிகித வாக்குகளுடன் வெற்றிவாகை சூடியது.
இவருக்கு எதிராக களமிறங்கிய ஹான் கியோ யூ தலைமையிலான தேசியவாத கட்சி (Nationalist Party) 39.6 சதவிகித வாக்குகளைப் பெற்றது.
தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் சாய், சீனாவின் அச்சுறுத்தலுக்கு ஜனநாயக சித்தாந்தத்தில் செயல்பட்டுவரும் தைவான் நாடோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோ அடிபணியாது. சீனா இதனைப் புரிந்துக்கொள்ளும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவானில் கடந்த 1949ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் வெடித்தது. இதன் விளைவாக, தைவான் தனிநாடாக பிரிந்து செயல்பட்டுவருகின்றது.