தன்னாட்சிப் பிராந்தியமான தைவானை தனது கட்டுக்குள் கொண்டுவர சீனா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுவருகிறது. தைவானுக்கு குடைச்சல் தரும் விதமாக, சீனாவின் தேசிய தினத்தன்று நூற்றுக்கணக்கில் போர் விமானங்களை தைவான் வான் வெளிப்பகுதியில் சீனா பறக்கவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் தைவானை சீனா சீண்டியுள்ளது. தைவானுக்கு பக்கபலமாக அமெரிக்கா விளங்கிவருகிறது. எனவே, சீனாவின் சீண்டலுக்கு அமெரிக்கா பதிலடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தைவானை சீனாவுடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என சீன அதிபர் ஜி ஜிங்பிங் கடந்த வாரம் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தோ-பசிபிக் பிராந்தியப் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவதால், அதை சமன் செய்ய இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாட் என்ற கூட்டமைப்பு உருவாக்கியுள்ளன.
தைவானின் அண்டை நாடாக ஜப்பான் விளங்கும் நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கைகளை ஜப்பானும் கூர்ந்து கவனித்துவருகின்றது.
இதையும் படிங்க:வங்கதேசத்தில் இந்து கோயில்கள் மீது தாக்குதல் - மூவர் மரணம்