தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இடிந்துவிழுந்த 140 அடி பாலம்... நொறுங்கிய படகுகள்! - தைவானில் 2 பேர் உயிரிழப்பு - 140 feet bridge collapse in Taiwan

தைபே: தைவான் நாட்டில் 140 அடி உயர பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இடிந்து விழும் 140 அடி பாலம்

By

Published : Oct 2, 2019, 11:08 AM IST

தைவான் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள நான்ஃபான்கோ துறைமுகம் அருகே 140 அடி உயரத்தில் மிகப்பெரிய பாலம் இருந்தது. சம்பவத்தன்று இப்பாலத்தில் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் கீழே சென்றுகொண்டிருந்த மூன்று படகுகள் விபத்தில் சிக்கி கடுமையாக சேதமடைந்தனர்.

இந்த விபத்தில் படகில் சென்ற இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து பற்றி அந்நாட்டு தீயணைப்புத் துறையினர் கூறுகையில், "பாலம் இடிந்து விழும்போது கீழே சென்ற மூன்று படகுகள் நொறுங்கின. பாலத்திலிருந்து விழுந்த லாரியின் ஓட்டுநர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் பாலத்தின் இடிபாடுகளில் ஆறு பேர் சிக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் 60-க்கும் அதிகமான வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க : மாடியில் தனிமையிலிருந்த காதல் ஜோடி... கீழே விழுந்து பரிதாப பலி!

ABOUT THE AUTHOR

...view details