தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

எல்லை மூடல் - இந்தியாவில் இருந்து நேபாளத்திற்குள் ஆற்றில் நீந்தியே சென்ற மக்கள்! - உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டம் தர்ச்சுலா

காத்மாண்டு: கரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த இருநாட்டு எல்லைகள் மூடப்பட்ட நிலையில், இந்தியாவிலிருந்து நேபாளத்திற்குள் ஆற்றில் நீந்தியே கூலித்தொழிலாளர்கள் சென்றுள்ளனர்.

swimming across Mahakali river to enter Nepal from India amid coronavirus lockdown
எல்லை மூடல் - இந்தியாவில் இருந்து நேபாளத்திற்குள் ஆற்றில் நீந்தியே சென்ற மக்கள்!

By

Published : Mar 31, 2020, 11:30 PM IST

உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பாதிப்பால் இதுவரை 199 நாடுகளைச் சேர்ந்த 8 லட்சத்து 24 ஆயிரத்து 559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்து 673 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் உறுதிசெய்துள்ளது.

கோவிட் -19 பெருந்தொற்று தீவிரமாகி வெளிப்பட்டுக் கொண்டிருப்பதால் பல நாடுகள் தங்களது எல்லைகளை மூடியுள்ளனர். இந்திய அளவில் வைரஸ் பெருந்தொற்று 2ஆம் நிலையை எட்டி தீவிரமடைந்துள்ளது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - நேபாளம் இரு நாட்டு எல்லைகளும் மூடப்பட்டுள்ளது.

மருத்துவக்குழுவினர் முகாமிட்டு வரும் அனைத்துப் பயணிகளிடமும் மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில், இந்தியாவை நேபாளத்துடன் இணைக்கும் ஒரு தொங்குப் பாலத்தைத் திறந்து 225 நேபாளிகளை மீட்டதாக நேபாள அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

எல்லை மூடல் - இந்தியாவில் இருந்து நேபாளத்திற்குள் ஆற்றில் நீந்தியே சென்ற மக்கள்!

இந்த மூன்று பேரும், 500க்கும் மேற்பட்ட நேபாளம் மக்களுடன், உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள தர்ச்சுலாவில் நான்கு நாட்களாக சிக்கித் தவித்து வந்துள்ளனர்.

நேற்று கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவர் கூறுகையில், "இருநாட்டுக்கும் இடையே உள்ள தொங்குப் பாலத்தின் வாயிலைத் திறக்குமாறு தலைமை மாவட்ட நிர்வாகியிடம் கோருவதற்காக தான் நாங்கள் ஆற்றின் குறுக்கே நீந்தினோம்."என்றார்.

சிக்கித் தவித்த நேபாள நாட்டவர்களில் பெரும்பாலோர் இந்தியாவில் தினசரி கூலிகள். ஞாயிற்றுக்கிழமை மாலை, பாலத்தின் வாயில் திறக்க வேண்டும் என்று கோரி நேபாள அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேபாள அரசாங்கம் நேற்று முதல் எல்லைகளைத் தாண்டி மக்கள் நுழைவதற்கான தடையை மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.

நேபாள-இந்தியா எல்லையில் சிக்கித் தவிக்கும் அனைத்து நேபாளிகளும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க நேபாள அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு மகாகாளி ஆற்றில் நீந்தியே மக்கள் சென்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க :ஸ்பெயினில் ஒரே நாளில் 849 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details