காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கில் நங்ஹர்ஹார் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகர் ஜலலாபாத் பகுதியில் சிறைச்சாலை ஒன்று உள்ளது.
இந்தச் சிறைச்சாலை மீது கிளர்ச்சியாளர்கள் கார் வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலை தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கியால் சுட்டு பாதுகாப்பு அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
இந்தத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 20 பேர் காயமுற்றனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடந்தவருவதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் கூறினார்கள்.
இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கும் தலிபான்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தலிபான் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். அப்போது, போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான்: பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை: ஐஎஸ் பயங்கரவாதி சுட்டுக்கொலை