பாகிஸ்தானில் அமைந்துள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான நங்னா சாஹிப் குருத்வாரா மீது வெள்ளிக்கிழமை மாலை, சில இஸ்லாமியர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
கிரந்தி என்ற சீக்கியரின் மகளான ஜக்ஜித் கவுரை கடத்தி, மதமாற்றம் செய்ததாகக் கூறப்படும் சிறுவனின் குடும்பத்தினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகாலிதள சட்டப்பேரவை உறுப்பினர் மஞ்சீந்தர் சிங் சிர்சா, தாக்குதல் தொடர்பான இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், சில இஸ்லாமியர்கள் நங்கனா சாஹிப்பிற்கு வெளியே சீக்கியர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்புகின்றனர்.
"குருத்வாராவிற்கு வெளியே கோபமான ஒரு முஸ்லீம் கும்பல் சீக்கிய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பும் நேரடி காட்சிகள்" என்று அகாலிதள சட்டப்பேரவை உறுப்பினர் மஞ்சீந்தர் சிங் சிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானில் இதுபோல நடைபெறும் தாக்குதல் சம்பவங்களினால் சீக்கியர்களின் மனதில் பாதுகாப்பின்மை அதிகரித்துவருவதாகவும், இச்சம்பவங்கள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கிருந்த போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தினர்.
இதையும் படிங்க: போருக்கு அறைகூவல்: 2020ஐ அதிர்வுடன் ஆரம்பித்துவைத்த அமெரிக்கா