ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் ஆரம்பித்த காட்டுத் தீயானது தனது கோர தாண்டவத்தை காட்டிவருகிறது. இதுவரை காட்டுத்தீயால் 24 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கான வீடுகளை அழிக்கப்பட்டன, 5 மில்லியனுக்கும் அதிகமான ஹெக்டேர் (12.4 மில்லியன் ஏக்கர்) நிலங்கள் அடியோடு நாசமாகின. மேலும், ஆஸ்திரேலியாவை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்துகொண்டிருந்த கோலோ கரடி, கங்காரு உள்பட பல விலங்குகள் உயிரிழந்தன.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தீயில் கருகி உயிரிழந்த கங்காருவின் புகைப்படம் அனைவரையும் கண்கலங்கவைத்தது. இதுமட்டுமின்றி தீயணைப்புப் படையினர், மீட்புப் படை, பொதுமக்கள் என அனைவரும் தங்களால் முடிந்தவரை காயப்பட்ட விலங்குகளைக் காப்பாற்றி சிகிச்சையளித்துவருகின்றனர். கரடிகளை உயிரை பணயம்வைத்து பொதுமக்கள் காப்பாற்றும் காணொலி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.