ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் படுகொலைசெய்யப்பட்டதற்கு நீதி கோரிய அமெரிக்காவில் தொடங்கிய நிறவெறிக்கு எதிரான போராட்டம், தற்போது பிரேசில், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா எனப் பல உலக நாடுகளில் காட்டுத்தீ போல் பரவிவருகிறது.
இந்தப் போராட்டத்தின்போது, அடிமைத் தொழில் செய்துவந்தவர்கள், இனப் படுகொலையில் தொடர்புடையவர்கள், காலனி ஆதிக்கவாதிகளின் சிலைகள் சூறையாடப்பட்டுவருகின்றன.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் சிட்னி நகரின் ஹைட் பூங்காவில் உள்ள ஜேம்ஸ் கூக் சிலைக்குப் படையெடுத்த போராட்டக்காரர்கள் அதன் மீது, "இனப்படுகொலை செய்வது ஒன்றும் பெருமையல்ல" என்ற வாசகத்தை எழுதியுள்ளனர்.
இதற்கிடையே, சிட்னியின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றான ரான்ட்விக்கில் அமைந்துள்ள ஜேம்ஸ் கூக்கின் இன்னொரு சிலையும் சூறையாடப்பட்டது.