தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நாட்டுக்கு சேவை செய்வதில் பிரணாப்பின் வேட்கை ஈடு இணையற்றது - இலங்கை பிரதமர் இரங்கல்! - மஹிந்த பாஜபக்ச

கொழும்பு: நாட்டுக்கு சேவை செய்வதில் பிரணாப்பின் வேட்கை ஈடு இணையற்றது என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர்
இலங்கை பிரதமர்

By

Published : Aug 31, 2020, 10:23 PM IST

டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரின் உடல்நிலை தொடர்ந்து இரண்டு வாரங்களாக மோசமடைந்து வந்த நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பிரணாப்பின் இறப்புக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில், " இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா பிரணாப் முகர்ஜியின் இறப்பு செய்தி கேட்டு வேதனை அடைகிறேன். சிறந்த அரசியல்வாதியாகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்த பிரணாப் அனைவரின் அன்பையும் பெற்றவர்.

நாட்டுக்கு சேவை செய்வதில் அவரின் வேட்கை ஈடு இணையற்றது. அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நாட்டின் வளர்ச்சியில் நிலையான தடம் பதித்தவர் பிரணாப் - பிரதமர் மோடி புகழாரம்

ABOUT THE AUTHOR

...view details