இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில், மொத்தமுள்ள 225 தொகுதிகளில் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 145 தொகுதிகளைக் கைப்பற்றியது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்ததன் மூலம் இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ச நான்காவது முறையாக நாளை (ஆகஸ்ட் 8) பதவியேற்கவுள்ளார்.
பதவியேற்பு நிகழ்ச்சி வடக்கு கொழும்புவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தர் கோயிலில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 10ஆம் தேதி, அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் ஆகியோர் பதவியேற்கவுள்ளனர். ராஜபக்சவின் கட்சி 22 மாவட்டங்களில் நான்கு மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்திலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.