கொழும்பு - சில அரசியல் வர்ணனையாளர்களின் பார்வையில், இலங்கையின் தற்போதைய தேவையான “வலிமைக்கான உணர்வை” வெளிப்படுத்துகிறது. போரினால் பாதிக்கப்பட்ட இந்தியப் பெருங்கடல் தீவு தேசத்தைப் பொறுத்தவரை, சிங்கள பவுத்தர்களின் இன-மத பெரும்பான்மையால் இந்த "வலுவான அரசியல்" தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது.
இலங்கை தனது புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் போது இலங்கை மக்கள் முன்னணியின் தலைவராகவும் இடைக்கால பிரதமராகவும் வழிநடத்தும் இரு ராஜபக்ச சகோதரர்களுக்கு, இது மதம் சார்ந்ததாக மாறி தேர்தலில் வெற்றி பெறும் வழிமுறையாக இருக்கும்.
மேலும் கோவிட்-19 நிலைமையில் தொற்றுநோய் தொடர்பான இறப்புகளை மிகக் குறைந்த விகிதங்களில், 11 இறப்புகள், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஒரே தெற்காசிய நாடாக தன்னைக் காட்டிக் கொள்கிறது. உலகின் சில பகுதிகள் இன்னும் ஊரடங்கு நிலையில் இருக்கும்போது நாடு தழுவிய நாடாளுமன்றத் தேர்தலை நடத்த இந்த 'வலுவான' பிம்பத்தை மீண்டும் திட்டமிட அரசாங்கம் ஆர்வமாக உள்ளது
"இது அரசியல் தலைமைக்கான உண்மையான சோதனை" என்று நாட்டின் வணிக தலைநகரான கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த SLPP வேட்பாளர் விமல் வீரவன்சா சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கூறினார். ராஜபக்சக்கள் வளர்ச்சிக்கு சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்பதே பொதுவான எண்ணமாக உள்ளது
தேர்தலுக்கு சுமார் 70 அரசியல் கட்சிகள், 313 சுயேட்சைகள் என மொத்தம் 7,452 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழீழ விடுதலை புலிகளுடனான நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை இயல்பான நிலைக்கு திரும்ப வைத்த சக்திவாய்ந்த ராஜபக்ச சகோதரர்கள் நாட்டின் நாயகர்களாக கருதப்படுவது, நாட்டில் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களை (சீன கடன் மூலம்) செயல்படுத்தியது, தேசிய தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சிறுபான்மையினர் வாக்குகளைத் திரட்டுவதற்கான திறனைப் பொறுத்தது என்ற கட்டுக்கதையைத் தகர்த்தது, மற்றும் கோவிட்-19 அவசரநிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஒரு தலைமை போன்ற SLPP பற்றிய மற்ற நற்சான்றிதழ்கள் பரப்புரையின் போது கூறுவதற்கு உள்ளன.
இத்தகைய நற்சான்றிதழ்கள் குறிப்பிடத்தக்க தேர்தல் தாக்கத்தை கொண்டிருந்தாலும், இலங்கையின் மிக சக்திவாய்ந்த இரண்டு அரசியல் உடன்பிறப்புகளான அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது மூத்த சகோதரரும் இரண்டு முறை அதிபருமான மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
சராசரி வாக்காளருக்கு ஒரு வசீகரம் ஏற்படுத்தும் ஒன்றுபட்ட முன்னணியை அமைப்பதில் பெயர் பெற்ற ராஜபக்சக்களுக்கு பாராளுமன்ற அதிகாரத்தைப் பெறுவதற்கான அவர்களின் கூட்டுத் தேவைக்கு அப்பால், கருத்து வேறுபாடுக்கான காரணங்கள் முற்றிலும் வேறுபட்டவை. ஆனால் இது சக்தி வாய்ந்த கூட்டணியை மட்டுமே பார்க்கும் வாக்காளர்களுக்கு புரிபடவில்லை.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை
அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கமசிங்க ஆகியோரின் ஆட்சியில் 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை மாற்றியமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச, சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கோருகிறார்.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் அதற்கு முந்தைய அதிபர்கள் அனுபவித்த தடையற்ற நிர்வாக அதிகாரங்களை மீட்டெடுக்க, தற்போதைய அதிபர் விரும்புகிறார். இதற்கு மாறாக 19வது திருத்தம், நிர்வாக அதிகாரங்களை குறைத்து, பிரதமர் அதிகாரங்களை மேம்படுத்தி, சுதந்திரமாக செயல்படும் ஆணையங்களை அமைப்பதன் மூலம் முக்கியமான பொதுத்துறைகளில் அரசியல் குறுக்கீடுகளை நீக்குவதற்கு வழி வகுத்தது. "சுய ஒழுக்கத்தின் அடிப்படையில் ஒரு நல்லொழுக்க சமுதாயத்தை" உருவாக்குவதாக சபதம் செய்த அதிபருக்கு இந்த அமைப்பு வெறுப்பை ஏற்படுத்துகிறது, மேலும் இந்த செயல்பாட்டில், இராணுவத்தினரை பொது சேவையில் ஈடுபட செய்து, அவர்களில் பலரை முக்கிய பதவிகளில் அமர்த்தியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் என்பது தலைகீழானது அல்ல. 19ஆவது திருத்தம் ஒரு சக்திவாய்ந்த பிரதமரை உருவாக்கியுள்ளதுடன், நிர்வாகம் மற்றும் சட்டமன்றங்களுக்கிடையில் அதிக சமநிலையையும் கொண்டு வந்துள்ளது. தனது சொந்த புகழ் மற்றும் பொது நிதி மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றால் தேர்தலுக்கு பின், அனுபவமுள்ள ராஜபக்ச பாராளுமன்றத்தை தனது நோக்கத்தை நோக்கி நகர்த்துவதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால் தற்போதைக்கு எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதே முக்கியம்.
தேர்தலில் மஹிந்த ராஜபக்சவிற்கு, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது என்றாலும், தேர்தல்கள் SLPP என்ற ஒற்றை குதிரை மட்டும் ஓடும் பந்தயமாகும். அதாவது திட்டமிடப்பட்ட வலுவான தலைமை, தகவல் கட்டுப்பாடு, நன்கு நிறுவப்பட்ட பரப்புரை இயந்திரம் மற்றும் பொது நிறுவனங்களில் இராணுவத்தினரை அமர்த்தியது போன்றவை ஆளும் கட்சி வசதியாக வெல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் காரணிகளாக உள்ளன, இலங்கை சமுதாயத்திற்கு தேவையான ஒழுக்கம் மற்றும் திறமையை ஊக்குவிக்க பின்னவர் கருதுகிறார்.