கொழும்பு: அதிபரின் அதிகாரங்களைக் குறைத்து, நாடாளுமன்றத்தின் பங்கை வலுப்படுத்த்தும் 19ஆவது சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
"எங்கள் முதல் பணி அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதாகும்” என்று புதிய நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டத்தின் போது நிகழ்த்திய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கை அரசியலமைப்பில் இறுதியாக 2015ஆம் ஆண்டு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பின் 18ஆவது திருத்தப்பட்ட சட்டத்தின் மூலம், அதிபராகும் ஒருவர் இரண்டு தடவை மட்டுமே பதவி வகிக்க முடியும் என முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மாற்றியமைத்திருந்தார்.
இந்த 18ஆவது திருத்தத்தை நிச்சயம் ரத்து செய்வதாக தெரிவித்தே, 2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டு வெற்றிபெற்றார்.